வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு என்றாலே ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு சபதம் எடுப்பதும் சில நாட்களில் மறந்து விடுவதும் இயல்பு, நானும் இதற்க்கு விதிவிலக்கல்ல. எப்போதுமே சபதம் எடுத்து மனதில் வைத்து மறந்து விடுவேன். சபதம் 20 சதவீதம் வெற்றி பெரும். ஆனால் இம்முறை இடுகை எழுதினால் சிறிது மனதில் தங்கும் மேலும் ஒரு எழுத்து பூர்வமான ஆதாரம் இருந்தால் வெற்றி பெரும் சதவீதம் பற்றியும் ஆராயலாம்.

சரி, போன வருட சபதம் என்ன என்றால் எந்த ஒரு அரசியல் வாதி பற்றியும், அவர்கள் ஊழல் பற்றியும் உறவுகளிடமும், நண்பர்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் பேசி நேரத்தை வீணாக்க கூடாது என்பது. ஒரு நான்கு மாதம் கழித்து உலக தமிழ் மாநாடு மூலம் நடந்த அரசியல் வியாபாரங்கள் பற்றி நண்பர்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் பலமணி நேரம் வீனடிதாயிற்று. மேலும் 2G (CAG) அலைகற்றை தணிக்கை அறிக்கை, ராடியா தொலைபேசி பதிவுகள் வெளியானதும் தெருவில் எவரைகண்டாலும் இந்த பேச்சு. இப்படி பேசி பேசி எதுவும் நடக்காது. என்னால் நேரத்தை வீணடிக்க தான் முடிந்தது.

இந்த வருட சபதம் என்ன என்றால் எந்த ஒரு அரசியல் வாதி பற்றியும், அவர்கள் ஊழல் பற்றியும் உறவுகளிடமும், நண்பர்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் பேசி நேரத்தை வீணாக்க கூடாது என்று எழுத்து பூர்வமாகவே எழுதுகிறேன். மேலும் சில சபதங்கள் " யாவருக்கும் பயன் படாத என்னை போன்ற இடுகைகளில் இனி நேரத்தை வீணடிக்க கூடாது. மாதம் ஒரு இடுகை பதிவு செய்யணும், அந்த இடுகை எதாவது ஒரு நல்ல விஷத்தை சொல்லணும். இணையத்திடம் அடிமையாகாமல் இருக்க சில பல வழிமுறைகளை கையாண்டு அடிமையாகாமல் தப்பிக்கணும்." நான் சிகரெட் குடிப்பதை இது போல் பல வருடங்களுக்கு முன் ஒரு சபதம் செய்து 90 சதவீதம் வெற்றி பெற்றேன். 10 சதவீதம் தோல்வி, அதாவது ஒவ்வொரு வருடமும் அப்பப்ப 20 சிகரெட்டுகள் புகைத்து விடுகிறேன்.

வியாழன், 30 டிசம்பர், 2010

எங்க ஊர்

அமெரிக்கா காரனும், ஐரோப்பா காரனும் எதை எதையோ (?) எப்பாடுபட்டோ கண்டுபிடிச்சாலும், அதை அதை எப்படி எப்படி பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது எங்க ஊர் பயலுகதான். கை பேசி கண்டு பிடிச்சவன் மார்டின் கூப்பர். இவன் எவளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சானோ(?). ஆனா எங்க ஊர் பயலுக மேனா மேனுக்கியா இருந்துகிட்டு இவன் கண்டு பிடிச்ச கை பேசி வைச்சிகிட்டு,அலைகற்றை வைச்சிகிட்டு இவன் சம்பாதிச்ச விட அதிகமா சம்பாதிசிடாணுக. என்ன செய்ய, பாதி நாளு அமெரிக்காகாரனும், ஐரோப்பாகாரனும் கேடு கேட்டவனுக, அவிங்களுக்கு கலாசாரம் கிடையாது, பல பேரோட சேந்து வாழுவானுக, பல விதமா வாழுவானுகன்னு சொல்லிகிட்டே, எங்க ஊரு காரனுக எங்க ஓட்ட கிடைச்சாலும் புகுந்து விளையாடிடுவானுக. சரி இது இருக்கட்டும்.

எங்க ஊர்ல பெண்கள தெய்வமாதான் மதிப்போம். குறிப்பா ராடிய அம்மா, பர்கா அம்மா, கனி அம்மா, சோனி அம்மா, அப்புறம் தமிழ்நாட்டு அம்மா இவங்கலாம் இந்த நுற்றாண்டு பெண் தெய்வங்கள்.எப்படியும் இந்த நூற்றாண்டுல என் ஊர் இந்தியாவுல இந்த பெண் தெய்வங்களாலே பெரிய மாற்றம் வரும்.