வெள்ளி, 12 மார்ச், 2010

விலைவாசி - 2010

தற்போதுள்ள அரசியல் தலைவர்களில் மன்மோகன் சிங் என்னை கவர்ந்து இருந்தார். காரணம் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் பல உயர் பதவிகளை வகித்தவர். இவர் பிரதமராகி நாட்டின் பொருளாதரத்தை முன்னேற்றுவார் என்று நானும் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. அதேபோல் நாட்டில் உள்ள அனைவரயும் லட்சத்திபத்தி ஆக்கிவிட்டுத்தான் இறங்குவார் போல!. ஏனெனில் நாட்டில் உள்ள நிலைமை அப்படி.ஜிம்பாபே மக்கள் அனைவரும் 'Billionaire' தான் ஆனால் என்ன பிரயோஜனம், 'Forbs Billionaire list' ல் இடம் பெறவில்லையே ?

இளங்கலை பொருளாதாரம் முதல் வருடம் படிக்கும் மாணவன் சொல்லுவான், "நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரித்தால் விலை வாசி அதிகரிக்கும்" என்று. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் செலவுகளை குறைக்க தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகளை இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்கிறது, அதனால் 1999 - இல் இருந்து இன்றுவரை இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இந்த பத்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றதால் விலைவாசி இவ்வாறு அதிகரித்தது. இந்த விலைவாசி அதிகரிப்பை குறைக்க மன் மோகன் அரசு எந்த நடவடிக்கை எடுத்தது என்பது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

வரும் வருடங்களில் இன்னும் பல லட்சம் பேருக்கு தொழில் நுட்பம்,வங்கி, காப்பீடு, இயந்திரவியல்,அறிவியல் துறைகளில் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வேலை வாய்ப்பு அதிகரித்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதிகமாக உணவு பொருட்கள் விற்பனையாகும். எனவே விலைவாசி இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் வடக்கு முகமாக செல்கிறது.
எனவே தங்கள் அரசு விலைவாசி ஏற்றத்தால் கவிழாமல் இருக்க, இனிமேலாவது சிவனே! என்று "ரப்பர் ஸ்டாம்ப்" ஆகா இல்லாமல் விலைவாசியை கட்டு படுத்த ஏதாவது நடவடிக்கை எடுங்கள்.
இன்னொரு விஷயம் "பன்னாட்டு நிறுவங்களே எங்க நாட்டுக்கு முதலீடு செய்ய வாங்கோ! வாங்கோ!" என்று கூவ வேண்டாம். ஏனெனில் அவர்கள் வியாபாரம் செய்ய வருவது இந்தியாவில் இருந்து லாபத்தை அள்ளத்தான். நஷ்ட படுவதற்காக அல்ல. இனிமேல் பொருளாதரத்தில் உள்ள இலகுவான சூத்திரங்களை மூலம் நாட்டை வழிநடத்தாமல், அதில் உள்ள சிக்கலான விசயங்களை இந்திய பொருளாதாரத்தில் பயன் படுத்த முயற்சி செய்தால் குப்பனும், சுப்பனும் பயனுருவான். இல்லாவிட்டால் டாட்டாக்களும், அம்பானிகளும் தான் பயனடைவார்கள். நாட்டில் உள்ள வளங்களை வைத்து விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் திட்டம் தீட்டுங்கள் தல.

சென்ற 2004 முதல் 2009 ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள். இதனால் ஏழை விவசாயிகளுக்கு பெறாமல், விவசாயம் மற்றும் அரசியல் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு லட்சகணக்கில் லாபம் கிடைத்தது. இம்முறையாவது விலைவாசி உயர்வால் வாடும் ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் திட்டம் தீட்டுங்கள்.
உங்கள் சர்தாஜி மூளையை ஒதுக்கிவிட்டு, பொருளாதார முனைவர் மூளையை பயன்படுத்தினால் வறுமையில் வாடும் இந்திய ஏழைகளுக்கு நலம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக