வியாழன், 24 செப்டம்பர், 2009

தமிழன் தண்ணி அடிச்சா....

கழக அரசுகள் தங்களால் காவேரி தண்ணீரை போராடி பெறமுடியுமோ அல்லது முடியாதோ, ஆனால் தங்களால் முடிந்த அளவு தண்ணிய ரோடுக்கு ரோடு எந்தவித தடையும் இன்றி டாஸ்மாக் மூலமாக குடி மகன்களுக்கு வாரி வழங்கி சேவை செய்கின்றன. வெரி குட்! வெரி குட்! பல இடங்களில் டாஸ்மாக் பள்ளிகளுக்கு அருகில் இருப்பதால், மாணவர்கள் வருகால குடிமகங்கலாவதற்கு ட்ரைனிங் ஈசி யாக உள்ளது. இது நிட்சியமாக சாதனை தான்!(?). ஆனா பெற்றோர்களுக்கு தான் வேதனை. இந்த தமிழன் தண்ணி அடிச்சுட்டு பண்ணுற அலும்பு இருக்கே அதை அந்த தெய்வம் கூட தாங்காது. எனக்கு தெரிஞ்சு சென்னை பட்டினத்துல கடந்த ஆறு மாசதுக்குள்ள தண்ணி அடிக்காத மூணு தமிழர்கள் தண்ணி அடிச்ச தமிழர்களால் பதிக்க பட்டுள்ளார்கள்.

பாதிப்பு-1 : எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் சாப்ட்வேர் கம்பெனியில மாசம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறாள். வருஷத்துக்கு அறுபதாயிரம் கிட்ட இன்கம் டாக்ஸ் செலுத்துகிறார்.
கிராமத்துல இருந்து நாலு வருடம் முன் சென்னையில் வேலை கிடைச்ச நாள் முதல் பஸ்ல தான் பணிக்கு செல்வாள், அவளுக்கு பைக் செலுத்த தெரியாது. சம்பவத்தன்று ஒரு தண்ணி அடிச்ச தமிழன் அவள் பக்கத்தில் தடுமாறி தடுமாறி மேல விழ வந்திருக்கான். அவள் "கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்" என்று சொல்ல, அந்த குடிகார ஒழுக்கம் கேட்ட நாயி கண்ட வார்த்தையால திட்டிருக்கான். மிகவும் நல்ல பெண்ணான அந்த பெண் ஒரு வார்த்தை கூட பதிலுக்கு எதுவும் பேசாமல் பஸ் கண்டக்டர் கிட்ட நடந்ததை சொல்ல, கண்டக்டர் ம்ம் ! ம்! என எருமை போல் உட்கார்ந்து இருந்தானாம். பஸ்ல பயணம் செஞ்ச எவனும் "ஏன்டா இப்படி தண்ணி அடிச்சுட்டு வந்து கலாட்ட செய்யுற ?"ன்னு ஒரு வார்த்தை கூட அந்த பெண்ணுக்கு ஆதரவா கேட்கல. பக்கத்தில் உட்கார்த்திருந்தா வயதான மூதாட்டி ஒருவர் தன் சீட்டை அந்த பெண்ணுக்கு தந்துவிட்டு பயணத்தை முடித்துள்ளார். நான் அந்த பெண் வேலை பார்க்கும் கம்பெனியில் தான் வேலை செய்கிறேன். என் நண்பர் ஒருவர் மூலம் அந்த பெண்ணுக்கு ஏற்றப்பட்ட துயர சம்பவத்தை அறிந்தேன்.

பாதிப்பு-2 : இந்த சம்பவம் என் நண்பர் ஒருவருக்கு ஏற்றப்பட்டது.நான் படித்த கல்லூரியில் அவரும் படித்தார். அவரும் சாப்ட்வேர் கம்பெனியில மாசம் அறுபதா யிரம் சம்பளம் வாங்குகிறார்.வருஷத்துக்கு எழுபதாயிரம் இன்கம் டாக்ஸ் செலுத்துகிறார்.சம்பவத்தன்று இரவு எட்டு மணிக்கு தன் குழந்தைக்கு பிஸ்கட் வாங்க கடைக்கு சென்றார். கடையில் இருந்து பிஸ்கட் வாங்கி திரும்பி உள்ளார், உடனே மோட்டார் சைக்கிள்-ல் தண்ணி அடித்துவிட்டு வந்த அவர்கள் மோதியுள்ளனர். "என்ன பார்த்து வரக்கூடாதா ?" என்று கேட்டுள்ளார். அவர்கள் "எங்களுக்கா பார்த்து வர தெரியவில்லை ?, உன் கண்ணை நோன்டி விடுவோம்." என்று கூறிவிட்டு என் நண்பரின் கன்னத்தில் இரண்டு அரை விட்டுள்ளனர். என் நண்பர் " எல்லாம் என் தலைவிதி ? " என்று தலையில் அடித்து விட்டு மோட்டார் சைக்கிள் நம்பரை கூட குறித்து வைக்காமல் வீடு திரும்பி உள்ளார். என் நண்பர் குடிகாரர்களிடம் சண்டை, மோட்டார் சைக்கிள் நம்பரை குறிக்காததற்கு காரணம் அவர் மறுநாள் ஆறுமாத காலத்துக்கு அமெரிக்கா செல்கிறார். இவர் அந்த ஒரு நாளில் போலீஸ்-ல் கம்ப்ளைன்ட் செய்தால் இழுத்து அடித்து அவருடைய பயணம் ரத்து ஆகலாம். ஒரு வேலை குடிகாரர்களிடம் சண்டை போட்டால், என் நண்பருடைய மண்டை உடையலாம் அல்லது கண் பிடுங்க படலாம், மேலும் அவருடைய பயணம் ரத்து ஆகலாம். எனவே " "எல்லாம் என் தலைவிதி ? " என்று முடிவு எடுத்து நல்லது தான்.


பாதிப்பு-3 : இந்த கசப்பான அனுபவம் என் பக்கத்துக்கு வீட்டு நண்பர் ஒருவருக்கு ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள பெரிய மருந்து தயார் செய்யும் கம்பெனியில் மாசம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்குகிறார்.வருஷத்துக்கு ஐம்தாயிரம் இன்கம் டாக்ஸ் செலுத்துகிறார். இரவு பத்து மணிக்கு பணி முடித்து கம்பெனி பஸ்ல் இருந்து இறங்கி வீடு திரும்பி கொண்டிருந்தார், அப்போது தண்ணி அடித்து விட்டு நின்று கொண்டிருந்த இரண்டு பேர் அவரை நோக்கி "வரான் பார் லூசு ?" என்று கூறி மது பாட்டிலை வீசி உள்ளனர். பாட்டில் அவருடைய மண்டையை பதம் பார்த்து ரத்தம் கொட்டியுள்ளது, உடனே அவர் பெரிய கல்லை எடுத்து எறிந்துள்ளார், அவரின் எதிர் தாக்குதலால் பயத்தில் ஓடிவிட்டனர். என் நண்பர் தலையில் மூன்று தையல் போட்டு காயத்தை குணப்படுத்தினார்.

இந்த ஒழுக்கம் கேட்ட தமிழர்கள் திருந்த மாட்டார்கள்.அதனால் டாஸ்மாக் அருகில் பார் திறக்கும் அரசுக்கு ஓர் வேண்டுகோள். அதாவது, "பொது இடங்களில் புகை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம்" என்ற சட்டம் இருப்பது போல், "பொது இடங்களில் குடித்து விட்டு சலம்புவது, அடுத்தவர்களுக்கு துன்பம் தருவது தண்டனைக்குரிய குற்றம்" என்று சட்டம் இயற்றினால் நல்லது.

மேற்கூறிய சம்பவங்கள் இந்த தமிழகத்தில் தினமும் பலருக்கு பலவிதமாக நடக்கிறது.
எல்லாம் டாஸ்மாக் செயல்!

இவ்வாறு தண்ணி அடிக்காதவர்களிடம் வரியை பெற்று கொண்டு, தண்ணி அடிப்பவர்களுக்கு அரசு மானியத்தில் சரக்குகள் வழங்கினாலும் ஆட்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை!

இந்த சம்பவங்கள் தமிழன் எவளவு ஒழுக்கம் தவறிவிட்டான் என்பதை காட்டும். இதுவும் தமிழனின் ஊர் போற்றும் கலாச்சாரங்களின் ஒன்றே!

நான் பணி விசயமாக ஜெர்மனி மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு சென்றுள்ளேன்.
ஜெர்மனியில் தினமும் டிராம், பஸ், ரயில் மூலம் பயணம் செய்து பணிக்கு செல்வேன்.
அங்கு மாத பாஸ் வாங்கினால் மூன்றிலும் பயணம் செய்யலாம். வெள்ளிகிழமை மாலை நேரமாகிவிட்டால், ஜெர்மானியர்கள் டிராம், பஸ், ரயில்-இல் புல் போதையில் தண்ணி அடித்துக்கொண்டே செல்வர். அந்த ஆறு மாத காலமும் அவர்கள் ஒரு சிறிய பிரச்சனை கூட, எனக்கோ அல்லது அடுத்தவர்களுக்கோ செய்ததில்லை. அவர்களுக்கு ஒழுக்கம் கற்று தர வள்ளுவர் போன்றோரும் இல்லை. எவ்வளவு நல்ல ஒழுக்கம் அந்த ஜெர்மானியர்களிடம்!

1 கருத்து:

  1. மனிதனை மனிதனாக மதிக்கும் மரியாதை வெளிநாடுகளில் உண்டு,

    இங்கோ நான் தான் பெரிய ஆள், என்கிற எண்ணமே பலரிடம் உண்டு. இதுவே முன்னேறாததற்கு காரணம்

    நல்ல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

    வாழ்த்துகள்

    word verification எடுத்து விடுங்கள், அது பின்னூட்டம் இடுபவருக்கு இடைஞ்சலாக இருக்கும்

    பதிலளிநீக்கு