வெள்ளி, 23 அக்டோபர், 2009

மலிவு விலை மனிதநேயம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தமிழகத்தின் மிக பெரிய அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அருகே 22-Oct-2009 அன்று நாற்பத்தி ஐந்து வயது மதிக்கதக்க ஒருவர் இறந்துள்ளார். அவர் காலில் அடிபட்டு இருபது நாட்களாக அந்த மருத்துவமனை அருகே இருந்து அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவமனைக்கு செல்வோரும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர். அவர் இறந்தபின் மருத்துவமனை ஊழியர்கள் போஸ்ட்மார்டம் செய்ய உடலை எடுத்து சென்றுள்ளனர். அந்த உடலை வைத்து மருத்துவ மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள்.

18-Oct-2009 அன்று இரவு முப்பத்து ஐந்து வயது மதிக்கதக்க ஒரு பெண் குரோம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்ல ஆட்டோவில் சென்றுள்ளாள். அந்த ஆட்டோ டிரைவர் தாம்பரத்தில் நிற்காமல், ஒரு தவறான நோக்கத்துடன் வண்டலூர் வரை சென்றுள்ளான். அந்த பெண் தாம்பரத்தில் இருந்தே கத்தி, கதறி உள்ளாள்.வண்டலூரில் அந்த ஆட்டோ, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயோலசிஸ்ட் ஆக வேலை பார்க்கும் ஒருவனாலும், அவனது உதவியாளனாலும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பெண் அவர்களிடம் ஆட்டோ டிரைவர் செய்த தவறை தெரிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேலை பார்க்கும் அந்த இருவரும் தாங்கள் போலீஸ் என்று கூறி, அந்த பெண்ணை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி வண்டலூர் பூங்கா கேட் முன் உள்ள கார் நிறுத்தத்திற்கு கொண்டு சென்று மானபங்கம் செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

உயிருடன் இருந்த மனிதன் இறக்க காத்து இருந்தனாரா ?
உயிருடன் இருந்த மனுசியை இறக்க வைக்க காத்து இருந்தனாரா ?
எதுவாய் இருந்தாலும் மனிதநேயம் இங்கு எப்பவுமே மலிவு விலைதான்.

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளும் தமிழக தலைநகரம்(=தலைநரகம்) சென்னையில் நடந்துள்ளது.இதை செய்தித்தாளில் படித்தேன். இதுபோல் பல நிகழ்வுகள் நம்ம ஊரில் நடக்கும் என்று சகஜமாக எடுத்துக்கொள்ளாமல், நாம் கொஞ்சம் எச்சரிகையுடன் வாழ பழகி கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக