திங்கள், 18 ஜனவரி, 2010

இந்தியன் யார் ?

மனிதன் என்றைக்குமே விலங்கு என்ற இனத்தில் இருந்து மாறப்போவதில்லை. இந்திய ஒரு சிறந்த கலாச்சாரமுள்ள நாடு என்பது பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற மேடைகளில் பேச்சிலும், இலக்கியங்களில் அச்சுவாகவும் தான் உள்ளது. நடை முறையில் இல்லை. சத்தியமாக இந்திய கலாச்சாரம் இந்தியாவில் இல்லை. இந்திய மக்கள் தன் அண்டை நாட்டில் உள்ள ஈழ தமிழன் உடல் சிதறி இறப்பதை கண்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்காமல் வேடிக்கை பார்த்தான். இப்போது எந்த அநியாயம் தன் கண்முன் நடந்தாலும் வேடிக்கைதான் பார்க்கிறான்.

மஞ்சு நாத் என்பவர் Indian Institute of Management ல் MBA படித்துவிட்டு தன் தாய் நாட்டிற்கு உழைக்கவேண்டும் என்பதற்காக தன் நண்பர்கள் போல் அல்லாமல், வெளிநாட்டு நிறுவன வாய்ப்புகளை உதறிவிட்டு Indian Oil corporation என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நேர்மையான அதிகாரியாக இருந்து பெட்ரோல் கலப்படங்களை தடுத்து நிறுத்தும் நல்ல செயல்களை செய்தததால் வட இந்தியாவில் மனித விலங்குகளால் சுட்டு கொல்லப்பட்டார்.

தென் இந்தியாவில் வெற்றிவேல் என்ற தமிழ் நாடு காவல் துறை உதவி ஆய்வாளர் சில மனித விலங்குகளால் வெட்டப்பட்டார். வெட்டுப்பட்டு உயிருக்கு இருபது நிமிடம் நடு ரோட்டில் போரடிக் கொண்டிருகையில், அந்த வழியில் வந்த இரண்டு தமிழ் நாடு அரசு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் வேடிக்கை தான் பார்த்தனர். இது வீடியோ எடுக்கப்பட்டு தொலைகாட்சி, இன்டர்நெட் என அணைத்து ஊடகங்களிலும் பரவி உள்ளது. தமிழக மக்கள் இதை கண்டு என்ன செய்தார்கள்?. நான் என்ன செய்தேன் ? அனைவரும் ஒரு சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. என்ன காரணம் என்று யோசித்தால் தெரிகிறது, இந்தியர்கள் மனித விலங்குகள் மட்டு மல்ல. இவைகள் நடமாடும் முட்டாள் விலங்குகள். இந்த முட்டாள் விலங்குகளுக்கு என்று ஒரு கலாச்சாரமாம் அதுவும் மற்ற நாட்டு மனித விலங்குளை விட உயர்ந்ததாம்.கேவலம் இதற்கு அமெரிக்க, ஐரோப்ப மற்றும் அணைத்து நாட்டு கலாச்சாரங்களும், அந்தந்த நாட்டு மனித விலங்குகளும் எவளவோ மேல்.

3 கருத்துகள்:

  1. நான் எனது நாடு,தமிழர்களின் கலாச்சாரம், ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் போக்கால் நல்ல மனிதனாக மாறிக்கொண்டிருக்கிறேன்

    இதை எப்படி எடுத்துக்கொள்வது?

    பதிலளிநீக்கு
  2. ஜோதிஜி அவர்களே!

    என் காந்தி தாத்தாவும், நேரு மாமாவும் ஜனநாயகம் மேல் நம்பிக்கை வைக்க சொன்னார்கள். மேலும் சூப்பர் நடிகர் 1996 தேர்தலில் தோன்றி "அம்மாவுக்கு ஓட்டு போட்டால் கடவுளாலும் நம்மை காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.அவர் சொல்லுக்காக அய்யாவுக்கு ஓட்டு போட்டேன். 2001 தேர்தலில் அதே சூப்பர் நடிகர் "நான் இந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்" என்றார். சரி, அவர் கூறிய கட்சி மற்றும் அதன் கூட்டணிக்கு ஓட்டு போட்டேன். பிறகு 2006 தேர்தலில் முருங்கைக்காய் ஸ்பெஷல் நடிகர் தோன்றி "இந்த கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்". ஆகையால் மீண்டும் அய்யாவுக்கே ஓட்டு போட்டேன்.

    இவ்வாறு சொல் புத்தி கேட்கும் சராசரி மனிதனாக இருந்த நான் அய்யா மற்றும் அம்மாவின் சொந்தம், உறவினர்கள் Bill Gates உடன் போட்டியிடுவதை அறிந்து சுயபுத்தி எனக்கும் உள்ளது என்று அறிந்து நல்ல மனிதனாக மாறிக்கொண்டிருக்கிறேன். மேலும் நடிகர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று நம்பிய நான் சுயபுத்தியால், அவர்கள் வெறும் களிமண் பொம்மைகள் என்றும் அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. சுருங்க சொன்னால் ஆட்டுமந்தையின் ஆடு பல்லு உடை பட்டு நாயாக மாறி இடுகையில் குரைத்துக்கொண்டிருகிறேன்.

    பதிலளிநீக்கு